ஸ்ரீரெட்டியின் கேவலமான செயல்...! இது தான் தொழிலா...? வெளுத்து வாங்கிய தம்பி ராமையா...!

 
Published : Jul 28, 2018, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
 ஸ்ரீரெட்டியின் கேவலமான செயல்...! இது தான் தொழிலா...? வெளுத்து வாங்கிய தம்பி ராமையா...!

சுருக்கம்

actor thambi rammaiha about srireddy

தற்போது வரை அதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட வில்லை என்றாலும் தான் கூறும் குற்றங்களுக்கு 90 சதவீத ஆதாரங்கள் உள்ளதாக கூறி இதுவரை தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இப்படி ஸ்ரீரெட்டி தொடர்ந்து தன்னை ஏமாற்றிய நடிகர்கள் குறித்து முன் வைத்து வரும் புகார்களுக்கு, ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் பேட்டி ஒன்றில் பதில் கொடுத்துள்ளார் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா.

இது குறித்து அவர் கூறுகையில் "ஸ்ரீரெட்டி" ஒரு நடிகையே இல்லை. அரசியல் உலகிலும் சரி திரையுலகிலும் சரி, தன்னை மீறி ஒரு தவறு நடக்காது. தோற்று போன ஒருவன் கையாளக்கூடிய கேவலமான செயலை தான் தற்போது ஸ்ரீரெட்டி செய்து வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய இவர் உண்மையிலேயே ஸ்ரீரெட்டி மிகவும் பாவம், ஒரு பெண் அரை நிர்வாணமாக மீடியா முன் அமர்ந்து போராட்டம் செய்வதை அவர்கள் பெற்றோர் பார்த்து எவ்வளவு வேதனை பட்டிருப்பார்கள். 

அதில் இருந்து உன்னை தவிர்த்து கொள்ள முடியாதா? சினிமா உலகம் உன்னை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் மற்ற துறைகளில் வேலைபார்க்க முடியாதா? இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிறாய்... இத்தனை ஆண்களோடு படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என கூறுவது சங்கடமாக உள்ளது.

அதே போல் இந்த பெண்ணை நம்ப வைத்து, அவருக்கு நம்பிக்கை கொடுத்து பயன்படுத்தி கொள்வதும் கேவலம் தான்... உண்மையில் அப்படி இந்த நடிகர்கள் இவரை பயன்படுத்தி இருந்தால் அவர்களை பெண் பாவம் சும்மா விடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

 

ஆனால் ஸ்ரீரெட்டியின் செயல் பாடுகளை வைத்து பார்த்தல், இதையே அவர் ஒரு தொழிலாக வைத்து கொண்டு, ஆந்திராவை, விட்டு தற்போது தமிழகம் வந்துள்ளார். இன்னும் வளர வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்காமல் ஸ்ரீரெட்டி தன்னுடைய போராட்டத்தை கூட பாசிடிவ் கோணத்தில் எடுத்து செல்லாமல் இப்படி போராடி வருவதால் அவரை பார்த்து பாவப்பட மட்டுமே தோன்றுவதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!