நாலு பேருக்கு பயன்படுவேன்... நடிகர் சூர்யா மீண்டும் மெசேஜ்!

Published : Jul 22, 2019, 07:07 AM IST
நாலு பேருக்கு பயன்படுவேன்...  நடிகர் சூர்யா மீண்டும் மெசேஜ்!

சுருக்கம்

இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.  

என்னுடைய நிஜ வாழ்க்கையில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியது, அதற்கு பாஜக, அதிமுகவிலிருந்து வந்த எதிர்வினையும் பேசு பொருளானது. இந்த விவகாரம் தொடபாக சூர்யா 2 பக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு பல தரப்பினரும் நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். சென்னையில் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.


இதேவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய தேசிய கல்வி குறித்து பேசாமல் தனது சமூக ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்தார். “ நாம் எடுக்கும் முயற்சிகள் எப்போதும் தவறலாம். ஆனால், விடாமுயற்சியை எப்போதுமே தவறவிடக் கூடாது என்பதை நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். என்னுடைய நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன். எதையும் விளம்பரத்துக்காக அல்லாமல் சமூக பணியைச் செய்யலாம். எந்தெந்த விஷயங்களை எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டுமே பேசினால் போதுமானது” என்று தெரிவித்தார்.
’காப்பான்’ பட இசை வெளியீட்டு விழாவில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பிரபலங்கள் தொட்டு பேசிய நிலையில், சூர்யா அதைப் பற்றி பட்டும் படாமல் பேசினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!