சொன்ன கருத்தில் மாற்றமில்லை... ஜோதிகாவிற்கு ஆதரவாக சூர்யா எடுத்த அதிரடி முடிவு...!

By manimegalai a  |  First Published Apr 28, 2020, 4:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த நடந்த விருது விழாவில்  'ராட்சசி' திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்த விருது விழாவில் ஜோதிகா பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த நடந்த விருது விழாவில்  'ராட்சசி' திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்த விருது விழாவில் ஜோதிகா பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. 

Tap to resize

Latest Videos

எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார். 

மேலும் செய்திகள்: காதலர் யார்? முதல் முறையாக நெருக்கமான புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்த பிரபல தமிழ் நடிகை!
 

ஜோதிகாவின் இந்த பேச்சு தற்போது கோலிவுட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் ஆதரவு கொடுத்தனர். 

இந்நிலையில் தங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அன்பை விதைப்போம்... 

அனைவருக்கும் வணக்கம்...  "மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை"  என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.  ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும்,  சமூக ஊடகங்களில் விவாதமும் மாறியிருக்கிறது.

கோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சில குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கே செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை.  நல்லோர்  சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதவர்களுக்கு, இது தெரிய வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின்... இதுவரை பார்த்திராத அழகு புகைப்படங்கள்!
 

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்க செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மிகப், பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம்.  தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள், எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்  இந்த சர்ச்சையை கையாண்டனர். நல்ல எண்ணங்களை விதைத்து செயல்களை அறுவடை செய்ய முடியும். என்ற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்திருக்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். என நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!