
‘காக்க காக்க’என்று படம் எடுத்ததாலோ என்னவோ அந்தக் கூட்டணி மீண்டும் இணைவதற்கு 11 வருடங்கள் ரசிகர்களைக் காக்க வைத்து விட்டார்கள் . யெஸ்... லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூர்யாவும் கவுதமும் இணைவது மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சமீப காலங்களில் சூர்யாவோ, கவுதம் மேனனோ பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது முக்கியமாகக் கேட்கப்படும் கேள்வி ‘காக்க காக்க பார்ட் 2’ எப்போது? என்பதுதான். காரணம் தமிழ் சினிமாவில் அப்படம் நிகழ்த்திய மேஜிக். 2003ல் வெளிவந்து சூப்பர் டூப்ப ஹிட் அடித்த அப்படத்தை அடுத்து 2008ல் அதே சூர்யாவை வைத்து ‘வாரணம் ஆயிரம்’என்கிற செம க்ளாஸிக் படம் கொடுத்தார் கவுதம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் இணைந்து படம் தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் இக்கூட்டணி இணையவே இல்லை.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, கவுதம் மேனனும் சூர்யாவும் இணைந்து ‘காக்க காக்க 2’வை வழங்க முடிவெடுத்துவிட்டார்கள் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காக பத்து நிமிடங்கள் மட்டுமே கவுதமிடம் கதை கேட்ட சூர்யா உடனே ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தகவல். பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க முன்வந்திருப்பது லைகா நிறுவனம். இன்னும் ஒரு சில தினங்களில் ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாகப் பெறப்போகும் கவுதம், அத்தொகையில் ஒரு பகுதியை ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸுக்கு உதவுவதாக அப்பட தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.