இந்த தமிழ் ஹீரோ என்னை அழிக்கப் பார்க்கிறார் !! மீண்டும் களம் இறங்கிய ஸ்ரீரெட்டி !!

Published : Nov 28, 2018, 07:50 AM IST
இந்த தமிழ் ஹீரோ என்னை அழிக்கப் பார்க்கிறார் !! மீண்டும் களம் இறங்கிய ஸ்ரீரெட்டி !!

சுருக்கம்

ஒரு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவர் தெலுங்கு திரையுலகினருக்கு நெருக்கமான அவர் ஒரு பெண்பித்தர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். சிறிது நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் களம் இறங்கியிருப்பது நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. .

சினிமாவில்  வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்  படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார்.

இவர் தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். மேலும் அவர் பாலியல் குற்றச்ச்ட்டு தெரிவித்த  நடிகர் லாரன்சும் தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு தமிழ் நடிகர் தனக்கு எதிராக செயல்படுவதாக இப்போது புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி

.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் , என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் ஆறவில்லை. மனரீதியாக பாதிக்கப்பட்டேன். என்னால்தான் அவை நடந்தன என்பதை நான் அறிவேன். ஆனாலும் படவாய்ப்புக்காக ஒரு பிணத்தை போலவே பயன்பட்டேன் என தெரிவித்துள்ளார்.. 

எதையும் மனப்பூர்வமாக நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். அது எனது வாழ்க்கையின் மோசமான தருணங்கள். அதில் இருந்து எப்படி நான் மீண்டேன்?  என கேள்வி எழுப்பியுள்ள ஸ்ரீரெட்டி, இப்போது ஒரு தமிழ் கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு நெருக்கமானவர். அவர் ஒரு பெண்பித்தர் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த பூமியில் வாழ எனக்கு தகுதி இல்லையா?’ எனவும் ஸ்ரீரெட்டி உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!