மாடுகளுக்கு பதிலாக பெற்ற மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி..! நடிகர் சோனு சூட் செய்த மிகப்பெரிய உதவி!

By manimegalai aFirst Published Jul 27, 2020, 11:34 AM IST
Highlights

இந்த கொரோனா வைரஸ், பல விவசாயிகளை பொருளாதார ரீதியில் அதிகம் பாதித்துள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்... மாடுகளை வைத்து நிலத்தை உழுவ பணம் இல்லாததால், தன்னுடைய இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பற்றி அறிந்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு முன்வந்து உதவி வழங்கியுள்ளார். 

இந்த கொரோனா வைரஸ், பல விவசாயிகளை பொருளாதார ரீதியில் அதிகம் பாதித்துள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்... மாடுகளை வைத்து நிலத்தை உழுவ பணம் இல்லாததால், தன்னுடைய இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பற்றி அறிந்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு முன்வந்து உதவி வழங்கியுள்ளார். 

மேலும் செய்திகள்: எம்.ஜி.ஆர் மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
 

ஆந்திர பிரதேச மாநிலம் மதனப்பள்ளியில் வசித்து வரும் விவசாயி நாகேஸ்வர ராவ். விவசாயம் மட்டுமே இவருடைய மூலாதாரம். எனவே தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் தக்காளி பழங்கள் பயிரிட முடிவு செய்தார். மேலும் அவரிடம் பயிரிடப்படும் நிலத்தை சரி செய்வதற்கு கூட பணம் இல்லை. எனவே அவருடைய இரு மகள்களை மாடுகளுக்கு பதிலாக ஏரில் பூட்டி நிலத்தை சரி செய்து, தக்காளி விதைகளை விதைத்து வந்தார்.

இவர் பெற்ற மகள்களை, இது போன்ற வேலை செய்ய வைத்ததற்காக இவரை பலர் கண்டித்தும், தாயாக மதிக்கும் நிலத்தை, மகள்கள் உழுவதில் என்ன தவறு என கூறிவந்தார். இதுகுறித்த செய்திகள், சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பரவி வந்தது.

மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்..! நடிகர் அருண் விஜய்யின் வீட்டை பார்க்கலாம் வாங்க..!
 

இந்த செய்தி, எதேர்ச்சியாக நடிகர் சோனு சூட் கண்களில் பட... அவர் உடனடியாக அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டும் என முடிவு செய்தார். எனவே நிலத்தை உழுவதற்கு டிராக்டர் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

தற்போது வைரலாகி வரும் வீடியோ இதோ..

This family doesn’t deserve a pair of ox 🐂..
They deserve a Tractor.
So sending you one.
By evening a tractor will be ploughing your fields 🙏
Stay blessed ❣️🇮🇳 https://t.co/oWAbJIB1jD

— sonu sood (@SonuSood)

 

click me!