T Rajendar : அமெரிக்கா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது உடல்நிலை குறித்து டி.ஆர். கூறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். இவர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க டி.ராஜேந்தரின் பெற்றோர் முடிவு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.ஆரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், டி.ராஜேந்தரை உயர்சிகிச்சைக்காக அமெரிக்க கூட்டிச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நடிகர் சிம்பு, அவசர அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார் சிம்பு.
இன்று மாலை டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட உள்ளார். அவர் அமெரிக்கா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது உடல்நிலை குறித்து கூறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரோடு அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Sushant Singh :2 ஆண்டுகள் ஆகியும் விலகாத மர்மம்! ‘ரீல் தோனி’ சுஷாந்த் சிங்கின் நினைவுநாளில் கலங்கும் ரசிகர்கள்