
நாம் இரு தினங்களுக்கு முன்பே எழுதியிருந்தபடி, நடிகர் சிம்பு 40 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதத்தை நேற்று துவங்கினார். இந்நிகழ்வில் ‘மாநாடு’படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கலந்துகொண்டார்.
சுமார் இரு மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்ட பிறகு சிம்பு தமிழ் சினிமாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பார்ட்டி, கூத்து கொண்டாட்டம் என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சிம்பு, இனியும் இப்படியே இருந்தால் நமக்கு எண்ட் கார்டு போட்டு விடுவார்கள் என்ற ஞானம் பெற்று 40 நாள் விரதம் மேற்கொண்டு நேற்று ஐயப்ப சுவாமிகள் தரிசனத்துக்கு மாலை போட்டார். அந்நிகழ்ச்சியில் சும்புவுடன் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அவரது ஐயப்ப தரிசனம் முடிந்தவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் இனியொரு புதிய சிம்புவை தமிழ் சினிமா பார்க்கும் என்றும் உத்தரவாதம் தருகிறார். இதே சிம்பு சில மாதங்களுக்கு முன்பு வேறொரு கருப்பு நிற ஆடை அணிந்து பெரியார் குத்து பாடலை வழங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.