Simbu: 'வெந்து தணிந்தது காடு' படு மாஸ்ஸான புகைப்படத்துடன் சிம்பு வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!

Published : Dec 07, 2021, 01:15 PM IST
Simbu: 'வெந்து தணிந்தது காடு' படு மாஸ்ஸான புகைப்படத்துடன் சிம்பு வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!

சுருக்கம்

சிம்பு தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம், 'வெந்து தணிந்தது காடு' (Vendhu thaninthathu kaadu) தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வேற லெவல் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  

சிம்பு தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம், 'வெந்து தணிந்தது காடு' தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வேற லெவல் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியான போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களுக்கு எகிறியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் சிம்பு.

நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் சுமார் 5 வருடங்கள் கழிந்து இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தெரிந்தது. அதே போல் எப்போதும் இதமான காதல் கதைகளையே இயக்கிய கெளதம் மேனன், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு படைப்பை கொடுக்க தயாராகி விட்டார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது.  இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக காயடுலோஹர் என்பவர் நாயகியாக உள்ளார். எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்க படலாம் என கூறப்பட்டது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

'மாநாடு' படத்தின் வெற்றியை கொண்டாடிய பின்னர், தற்போது மீண்டும்... சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில், நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளதாக, கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் மாஸ் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் செகண்ட் லுக்கில் கூட... சிம்பு களைப்பில் இருப்பது போலவும், படுக்க கூட இடம் இல்லாத ஒரு அறையில் பலர் படுத்திருப்பது போலவும், சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் கதாபாத்திரத்துக்கு சற்றும் சம்மந்தமே இல்லாதது போன்று செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். சிம்புவின் இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!