2 பெண்கள் உட்பட தனக்கு எத்தனை அசிஸ்டெண்டுகள் வச்சிருக்காரு தெரியுமா நடிகர் சிம்பு?...

By Muthurama Lingam  |  First Published Jun 30, 2019, 10:23 AM IST

தனது மார்க்கெட் மிகவும் டல்லானதால் சில காலமாக வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த  நடிகர் சிம்பு மீண்டும் டண்டணக்கா டண்டணக்கா ஆட்டம் போட ஆரம்பித்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.


தனது மார்க்கெட் மிகவும் டல்லானதால் சில காலமாக வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த  நடிகர் சிம்பு மீண்டும் டண்டணக்கா டண்டணக்கா ஆட்டம் போட ஆரம்பித்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

சிம்பு என்றாலே வம்பு, என்று கோலிவுட்டில் சொல்லாதவரகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது பெயரை டேமேஜ் செய்து வைத்திருக்கும் சிம்பு, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது வாலை சுருட்டி வைத்துக் கொண்டு சமத்து பிள்ளையாக வேலை பார்ப்பதாக கூறப்பட்டது.அதற்கு ஏற்றவாறு சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் சிம்புவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் சிம்புவை வைத்து படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன் வந்தார்கள்.இந்த நிலையில், சிம்பு தனது வம்புத்தனத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், அதனால் தயாரிப்பாளர் ஒருவர் படாதபாடு படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

 அதாவது, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ’மாப்டி’ என்ற கன்னட படத்தின் தமிம் ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கிறார். இதற்காக சிம்புவுக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறதாம்.இந்த பெரிய தொகை சம்பளத்தை கொடுத்தும் சிம்பு தயாரிப்பாளருக்கு கன்னாபின்னாவென்று செலவுகள் வைப்பதோடு படப்பிடிப்புக்கும் அடிக்கடி டிமிக்கி கொடுக்கிறாராம்.

 தன்னுடைய மேக்கப் பெண்கள் 2 பேர் மற்றும் தனது நண்பர்கள் 8 பேர் என மொத்தம் 10 பேரை ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து தினமும் மது, உணவு என தடபுடலான விருந்து வைப்பவர், அந்த பில்லை தயாரிப்பாளர் தலையில் கட்டிவிடுகிறாராம்.மேலும், படப்பிடிப்பை இரவில் வைத்தால் தான் வருவேன், என்றும் தொல்லை கொடுக்கிறார். சிம்புவின் இந்த வம்புத்தனம் குறித்து தயாரிப்பாளர் தனது நெருக்கமானவர்களிடம் புலம்ப அது கோடம்பாக்கத்தின் அத்தனை திசைகளிலும் தீயாய்ப்பரவி வருகிறது. இது ஒரு புகாராக விரைவில் தயாரிப்பாளர் சங்கக் கதவைத் தட்டினாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.


 

click me!