யப்பா... ஏன், ஏன், ஏன்??.... கொளுத்திப்போட்டவர்களால் கொந்தளித்துப் போன வெங்கட் பிரபு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 30, 2021, 07:32 PM IST
யப்பா... ஏன், ஏன், ஏன்??.... கொளுத்திப்போட்டவர்களால் கொந்தளித்துப் போன வெங்கட் பிரபு...!

சுருக்கம்

மாநாடு படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இடையே சம்பள விவகாரத்தில் சிக்கல் வெடித்ததாகவும், அதனால் மாநாடு படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

நீண்ட பிரேக்கிற்கு பிறகு சிம்பு கம்பேக் கொடுத்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க தீர்மானித்த சிம்பு, ஏற்கனவே பஞ்சாயத்தில் இருந்த மாநாடு பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மங்காத்தா அளவிற்கு மாஸான படத்தை கொடுக்கப்போகிறேன் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தில் இருந்தே சிம்பு ஃபேன்ஸின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. சுரேஷ் காமாட்சி பெரும் பொருட் செலவில் படத்தை தயாரித்து வருவதாக தகவல். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

கடந்த 10ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நடிகர் சிம்பு, படக்குழுவினருடன் கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட, மாநாடு படக்குழுவில் பணியாற்றிய சுமார் 300 பேருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளார்.  இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. மீதம் உள்ள பணிகள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கைப்பற்ற சில ஓடிடி தளங்கள் முயல்வதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கண்டிப்பாக படம் திரையரங்கில் தான் வெளியாகும் என தெரிவித்தார்.

மாநாடு படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இடையே சம்பள விவகாரத்தில் சிக்கல் வெடித்ததாகவும், அதனால் மாநாடு படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கடுப்பான இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், யப்பா சாமி.. ஏன்,ஏன்,ஏன்?... தயவு செஞ்சி வதந்தி பரப்பாதீங்க. மாநாடு பட வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கள் என செம்ம கடுப்புடன் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!