
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு மாநில மக்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளதற்கு,கர்நாடக மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்
இந்த கருத்தால் கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளார் நடிகர் சிம்பு
தமிழகமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் திரைத்துறையினரும் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தினர்
அந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை.அதே சமயத்தில் இரு மாநில மக்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான் காவேரி விவகாரம் என பேசிய சிம்புவிற்கு கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
அங்குள்ள பிரபல தொலைக்காட்சிகளும் சிம்புவிற்கு போன் செய்து, அவருடைய கருத்துக்களை கேட்டனர்.
இதன் மூலம் தற்போது சிம்பு கர்நாடக மக்கள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார்.அதுமட்டுமின்றி, அவருடைய படங்களுக்கு அமோக வரவேற்பு கொடுக்க முன் வந்து விட்டனர் கர்நாடக மக்கள்
மேலும்,ரஜினி மற்றும் கமலுக்கு கர்நாடக மக்களிடம் கொஞ்சம் வெறுப்பு கிடைத்தாலும்,அதே வேளையில் சிம்புவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.