
’மதத்தையும் சினிமாவையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். மதம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் சினிமாவை விட்டு வெளியேறிவிடுவதே நல்லது’ என்று ’டங்கல்’ பட நாயகி ஷைரா வாசிமுக்கு ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ளார் பிரபல நடிகர் சித்தார்த்.
அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தின் மூலம் 15 வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் சைரா வாசிம். இந்த படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்து முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானார். அதே படத்துக்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அடுத்து அவர் நடித்த ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படமும் வெற்றிபெற்று மேலும் புகழ்பெற்றார்.
படங்கள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்த அவர் மூன்றாவதாக ’தி ஸ்கை ஈஸ் பிங்க்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவரான சைரா வாசிம் மதம் காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “5 ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறிவிட்டது. நான் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லை. திரையுலக வாழ்க்கை எனது நம்பிக்கை மற்றும் மத உறவுகளில் தலையிடுவதால் சினிமா எனக்கு பொருத்தமானது இல்லை” என்று குறிப்பிட்டு தான் திரையுலகை விட்டு விலக விரும்புவதை அறிவித்திருந்தார்.
சைரா வாசிமின் திடீர் விலகல் அறிவிப்பு ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தித்திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரை வரவேற்றும் வருத்தம் தெரிவித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இந்நிலையில் அவரது முடிவு குறித்து தனது கருத்தை வெளியிட்ட நடிகர் சித்தார்த்,“இது உங்களுடைய வாழ்க்கை. பிடித்ததை செய்யுங்கள். கலையும், தொழிலும்தான் வாழ்க்கை என்று நான் நம்புகிறேன். இதில் மதத்தை கலக்க கூடாது என்று போராடுகிறோம். அதற்கு இங்கு வேலை இல்லை. உங்கள் மதம் காரணமாக விலகுவதாக இருந்தால் நீங்கள் சினிமா துறைக்கு பொருத்தமானவர் இல்லை” என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.