கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிரபல நகைச்சுவை நடிகர்… மதப் பிரச்சாரத்தில் இறங்கினார் !!

Published : Dec 07, 2018, 09:17 AM ISTUpdated : Dec 07, 2018, 09:22 AM IST
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிரபல நகைச்சுவை நடிகர்… மதப் பிரச்சாரத்தில் இறங்கினார் !!

சுருக்கம்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் செந்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை நடிகர் செந்திலை யாராலும் மறக்க முடியாது, கவுண்டமணி – செந்தில் ஜோடி  தமிழக மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. 1980 – 90 களில் அவர்கள் இருவரும் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். லட்சக்கணக்கான ரசிகர்களை இந்த ஜோடியினர் மகிழ்வித்தனர்.

அதுவும் கவுண்டமணியிடம் செந்தில் அடி வாங்குவதும் முகத்தை அப்பாவி போல் அவர் வைத்துக் கொள்வதும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. பின்னர் புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் வர வர அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

அதுவும் வடிவேல் தலைதூக்கிய பின் கவுண்டமணி – செந்தில் இருவருமே திரைத் துறையில் இருந்து ஒதுங்கியே இருந்நனர். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே அவர்கள் தலைகாட்டி வந்தனர்.

செந்திலைப் பொறுத்தவரை திரையுலகைத் தவிர தீவிர அரசியலிலும் ஈடுபட்டார், அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் டி.டி.வி.தினகரனை ஆதரித்து வந்தார். மேலும் செந்திலின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் விவசாயமும் செய்து வந்தார்.

இந்நிலையில் அண்ணைமயில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் செந்தில், மதப்பிரச்சாரம் செய்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களிடம் கேட்டபோது,  செந்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துவ மதத்தில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது உண்மையா ? அல்லது வதந்தியா ? என்பது குறித்து நடிகர் செந்தில் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

HBD Rajinikanth : கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!