
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சத்யராஜுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சத்யராஜுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.