பாகுபலியாக சந்தானம்... கட்டப்பாவாக மொட்டை ராஜேந்திரன்! கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான பிஸ்கோத் ட்ரைலர்!

Published : Aug 03, 2020, 05:11 PM IST
பாகுபலியாக சந்தானம்... கட்டப்பாவாக மொட்டை ராஜேந்திரன்! கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான பிஸ்கோத் ட்ரைலர்!

சுருக்கம்

நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், நடித்துள்ள 'பிஸ்கோத்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.  

நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், நடித்துள்ள 'பிஸ்கோத்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், தற்போது சந்தானம் இணைந்து நடித்து வந்த திரைப்படம் 'பிஸ்கோத்'.  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வந்தது.

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தாரா அலிஷா பெர்ரி, இவர் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான, A1 படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மற்றொரு நாயகியாக ஸ்வாதி முப்பாலா என்பவர் அறிமுகமாக உள்ளார். 

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் மீண்டும் துவங்கியதால் அந்த பணிகள் நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி கதை சொல்வது போல் துவங்குகிறது. 

இதில் மஹாராஜா போல் செம்ம கெத்தாக தோன்றுகிறார் சந்தானம், மேலும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் காமெடியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கட்டப்பாவாக வந்து கலக்கியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். பல்லால தேவனாக வருகிறார் ஆனந்த் ராஜ். அதே நேரத்தில் அவ்வப்போது சில காதல் காட்சிகள் இடையிடையே வந்து செல்வதால், காதலுக்கும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இந்த படம் உருவாகியுள்ளது தெரிகிறது.

படத்தின் இறுதியில், திரையரங்கம் திறக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது என கேட்க, ஓடிடியில் பார்க்க வேண்டியது தான் என்று கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முயற்சி எடுத்து வருகிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.

இந்த படத்தின் ட்ரைலர் இதோ....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்!