
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் `ஸ்மார்ட் சங்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் கடந்த 2 நாட்களாக ஹைதராபாத் சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது.
நேற்று குல்ஜார் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் ராம் சிகரெட் பிடித்தாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சார்மினார் காவல் நிலைய எஸ்ஐ பண்டரி, நடிகர் ராம் மீது 2003 சட்டப்பிரிவு 4ன் படி பொது இடத்திலும், கூட்டம் அதிகம் உள்ள இடத்திலும் சிகரெட் பிடித்ததற்காக ரூ.200 அபராதம் விதித்தார்.
இதையடுத்து நடிகர் ராம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினார். இருப்பினும் சினிமா படப்பிடிப்பின் ஒரு காட்சியாக நடிகர் ராம் சிகரெட் பிடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால் அதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் காட்சியும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.