"விஜய் ஒரு பொடிப்பையன் சார்"..!! "அந்த தம்பிக்கு இப்பதான் 40 வயசு ஆகிறது"...தாறுமாறாக பேசிய வில்லன் நடிகர்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2019, 12:03 PM IST
Highlights

நடிகர் விஜய் கூட அரசியலுக்கு  வந்து முதல்வராவார் என்று கூறுகிறார்கள்.  அவரெல்லாம்  பொடி பையன் சார்... அந்தத் தம்பிக்கு 40 வயசு தான் ஆகிறது அவர் எல்லாம் ரொம்ப பொறுமையாக இருக்கவேண்டும்.  என்று ராதாரவி அதிரடியாக கூறியுள்ளார்.  தற்போது  அவரின் பேட்டி சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

நடிகர் விஜய் எல்லாம் முதலமைச்சராக கனவு காண்பது ரொம்ப ஓவர், அதற்கு இன்னும் பொறுமை தேவைப்படுகிறது, இப்போதுதான்  அவருக்கு 40 வயதாகிறது அவர் ஒரு பொடி பையன் சார் என  ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

ராதாரவியின் பேச்சு என்றாலே அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும்,  யாரையும் எந்த நேரத்திலும் தைரியமாக விமர்சிக்க க்கூடியவர் அவர். இந்நிலையில் நடிகர் விஜய்  குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர்,  தற்போதைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு திமுக, அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றார்.  அதற்கு காரணம் அந்த இரண்டு கட்சிகளின் கட்டமைப்பை மிக வலிமையாக உள்ளதுதான் என்றார்.  நடிகர் கமல்ஹாசன் மிகவும் அவசர படுகிறார், விஜயகாந்து எதிர்கட்சித் தலைவராக அமர்ந்து விட்டார். ஆனால் கமல்ஹாசன் குறைந்தது பத்தாண்டுகளாவது பொறுமையாக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக வரலாம், என்று கூறியுள்ளார். 

ஆனால் கமலிடம் பொறுமை சுத்தமாக இல்லை என்றார்,  நாம் தமிழர் கட்சி சீமான் எனக்கு நல்ல தம்பி என்றாலும்கூட  அவரின் பேச்சு நிலைத் தன்மை இல்லாத தாக உள்ளது.  எனவே அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்,  நடிகர் விஜய் கூட அரசியலுக்கு  வந்து முதல்வராவார் என்று கூறுகிறார்கள்.  அவரெல்லாம்  பொடி பையன் சார்... அந்தத் தம்பிக்கு 40 வயசு தான் ஆகிறது அவர் எல்லாம் ரொம்ப பொறுமையாக இருக்கவேண்டும்.  என்று ராதாரவி அதிரடியாக கூறியுள்ளார்.  தற்போது  அவரின் பேட்டி சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதே நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வர உள்ள நிலையில் அவரைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அந்த பேட்டியில்  அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

click me!