நடிகர் பிரஷாந்த் முன்னால் மனைவிக்கு வந்த சோதனை.... வருத்தத்தில் குடும்பத்தினர்...!

 |  First Published Mar 28, 2018, 3:32 PM IST
actor prashanth wife family is sad



நடிகர் பிரஷாந்த்:

தமிழ் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவரை கதாநாயகனாக மனதில் வைத்து திரைக்கதை எழுதிய இயக்குனர்களும் உள்ளனர். 

Latest Videos

மேலும் இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம் என்றும் சொல்லும் அளவிற்கு, தன்னுடைய அழகால் பல ரசிகைகளின் மனதை கவர்ந்த நாயகன் இவர். 

வாழ்கை:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே பெற்றோர் மூலம் பார்காப்பட்ட கிரகலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். பின் தான் தெரிய வந்தது அவர் நடிகர் பிரஷாந்த்தை விட வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதும். மேலும் ஏற்கனவே கிரகலட்சுமி திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சை எழுந்தது. 

மன உளைச்சலில் பிரஷாந்த்:

கிரகலட்சுமி பற்றி தெரிய வந்ததும் இவர்கள் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுப்பாடுகள், ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது. திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். 

திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால், நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். 

தோல்வியடைந்த படங்கள்:

ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரஷாந்த். ஆனால் இது வரை அவரால் ரசிகர்களை கவரும்படியான வெற்றிப்படத்தை கொடுக்க முடியவில்லை. 

சோகத்தில் முன்னால் மனைவி:

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நடிகர் பிரஷாந்தின் முன்னால் மனைவி கிரகலட்சுமி வீட்டில் இருந்து 170 சவரன் நகை கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாம். இது குறித்து போலிசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், நகையை பறிகொடுத்த அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!