ஆபாசத்தின் அத்து மீறும் சொப்பன சுந்தரி! நடிகர் பிரசன்னாவுக்கு வந்த புது பிரச்சனை!

Published : Oct 27, 2018, 07:32 PM ISTUpdated : Nov 13, 2018, 12:45 PM IST
ஆபாசத்தின் அத்து மீறும் சொப்பன சுந்தரி! நடிகர் பிரசன்னாவுக்கு வந்த புது பிரச்சனை!

சுருக்கம்

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது, வித்தியாசமான நிகழ்ச்சிகளை எடுக்கிறோம் என்கிற பெயரில் சில ஆபாசமான நிகழ்ச்சிகளை கொண்டு வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது, வித்தியாசமான நிகழ்ச்சிகளை எடுக்கிறோம் என்கிற பெயரில் சில ஆபாசமான நிகழ்ச்சிகளை கொண்டு வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இதே போல் மாடல்களை வைத்து  சொப்பன சுந்தரி என்கிற நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆபாசத்தின் மிகவும் அத்து மீறுவதால் பலர் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் மூலம் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்திருக்கும் பிரபல நடிகர் பிரசன்னாவை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஏன் இது போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் துவக்கம் என பார்த்தல் பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர். அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து குறித்த டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்று பலரும் கூறிவந்த நிலையில் தற்போது சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் போட்டியாளர்ர்கள் மிகவும் கவர்ச்சியில் எல்லை மீறி போய்கொண்டிருப்பது குடும்ப ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலரும் இதே போன்ற கேள்விகளையும், தங்களுடைய விமர்சனங்களையும் எழுப்பி வருகிறார்கள். இதற்க்கு பிரசன்னா என்ன பதில் சொல்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?