'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டுள்ள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.
சிறந்த இந்திய திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக.. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களுக்கு 69 வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பிக்சன் மற்றும் நான் பிக்சன் பிரிவில் தமிழ் படங்கள் மற்றும் படைப்புகளுக்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
குறிப்பாக பிக்சன் பிரிவில், 'கடைசி விவசாயி' படத்திற்கு இரண்டு விருதும், 'இரவின் நிழல்' படத்தில் இடம் பெற்ற மாயவாத் தூயவா பாடலைப் பாடிய பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகபட்சமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் இந்த முறை தேசிய விருதுகளை அள்ளியது. குறிப்பாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் மட்டுமே 6 தேசிய விருதுகளை கைப்பற்றியது. அதேபோல் தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன், போன்ற படங்களுக்கு ஒரு தேசிய விருது கூட கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் "இந்த சகாப்தத்தின் மிக மோசமான தேர்வு 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது " என்று கூறியிருந்தார். அதேபோல் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானி ஜெய்பீம் படத்தின் ஹேஷ்டேக் வெளியிட்டு இதயம் நொறுங்குவது போன்ற இமோஜியை வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அடுத்த அடுத்த பல பிரபலங்களும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் #Jaibhim திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ
தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? pic.twitter.com/8IZgOLKgPL