சினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ! கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் !!

Published : Oct 18, 2019, 09:05 PM IST
சினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ! கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் !!

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் அவருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.  இதில் கமல்ஹாசன் மற்றும்  பிரபு குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.   

1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால  பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் பெரும்பாலான நேரங்களில் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திலேயே வளர்ந்தவர். நடிகர் பிரபு, ராம்குமார் என்ற இரு மகன்களைப் போலவே கமல்ஹாசனையும் நடிகர் சிவாஜி தனது மகன் போலவே  வளர்த்து வந்தார்.

இந்தநிலையில், கமல்ஹாசன் தனது திரையுலக பயணத்தில் 60 ஆண்டுகளை நிறைவு செய்தததையொட்டி சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றார்.

அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

அதன்பின்னர் பிரபு குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது என்றும், பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள்  கண்கலங்க வைத்தன என்றும் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!