
இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில், நடிகர் பார்த்திபன் தாதாவாக நடித்து வரும் திரைப்படம் 'கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா'. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் தாதாவாக போராடுவதையும், இதனால் என்னென்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை காமெடி, கலந்த படமாக எடுத்துள்ளனர்.
"ஒரு தலைமுறைக்கு முன்னால், தஞ்சையில் இருந்து ஒரு குடும்பம் பெங்களூருவில் குடியேறுகிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தில் தலைவன் அங்குள்ள மார்க்கெட்டின் தாதாவாக மாறுகிறார். அவனுக்கு வயதாகியதும், அதை பயன்படுத்தி சிலர் தாதாவாக முயற்சிக்கிறார்கள்.
அதனால் அந்த தாதா, தன் மகன் பார்த்திபனை அழைத்து தாதாவாக மாறுவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கிறேன் அவ்வளவு சீக்கிரம் தாதா பட்டத்தை விட கூடாது. என மார்க்கெட்டுக்கு இன்று முதல் நீதான் தாதா என்று கூறுகிறார்.
தந்தை சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு தாதாவாக களம் இறங்குகிறார் பார்த்திபன். தனது தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவும் தாதா பட்டத்தை கைப்பற்றும் நடக்கும் போராட்டமே கே ஆர் மார்க்கெட் தீனா என்ற படத்தில் பெயரில் படமாகிறது.
இந்த படத்தை கே.ராமு என்பவர் தயாரிக்கிறார். செலின்- முஜீப் ரஹ்மான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். சந்தனகுமார் வசனம் எழுதியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.