விஜய் சேதுபதியை அத்திவரதோடு ஒப்பிட்ட பார்த்திபன்...என்னடா இது காஞ்சிபுரத்துக்கு வந்த சோதனை...

Published : Aug 04, 2019, 02:32 PM IST
விஜய் சேதுபதியை அத்திவரதோடு ஒப்பிட்ட பார்த்திபன்...என்னடா இது காஞ்சிபுரத்துக்கு வந்த சோதனை...

சுருக்கம்

எப்போதும் எதையாவது விவகாரமாகப் பேசி வம்பு வளர்த்து வரும் இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் ஒரு படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதியை காஞ்சிபுரத்து அத்திவரதோடு ஒப்பிட்டு ஒரு பெரிய சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.  

எப்போதும் எதையாவது விவகாரமாகப் பேசி வம்பு வளர்த்து வரும் இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் ஒரு படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதியை காஞ்சிபுரத்து அத்திவரதோடு ஒப்பிட்டு ஒரு பெரிய சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

கையில் நாலைந்து படங்கள் பூஜை போடப்பட்டுக் காத்திருக்கும் நிலையில் நேற்று ‘துக்ளக் தர்பார்’என்றொரு புதிய படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். 

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். 'துக்ளக் தர்பார்' படத்தின் தொடக்க விழா பூஜை, சென்னை வடபழனியில் உள்ளநடிகர் விஜய்  திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் பற்றிய, ஒரு சிறு கதையை கூறி,விஜய் சேதுபதியும் ஒரு அத்திவரதர்தான்  அதுபோல விஜய் சேதுபதியின் வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்றார். 

பார்த்திபனின் அந்தப் பேச்சுக்கு அத்திவரதரின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்