நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை அருகே திடீரென ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பியதாக, பரபரப்பு பதிவு ஒன்றே போட்டுள்ளார் பிரபல நடிகர் நித்தின் சத்யா.
'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'ட்ரீம்ஸ்', 'ஜி', 'மஜா', போன்ற 30க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நிதியின் சத்யா. குறிப்பாக 'சென்னை 28' படத்தில் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கடைசியாக இவர் பிக்பாஸ் ஆரவ், நடிப்பில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி 'ஜருகண்டி', 'லாக்கப்' போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் இவர் விபத்தில் சிக்கி நூல் இழையில் உயிர் தப்பியதாக பதிவு ஒன்றை போட்டு, சென்னை மக்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: என்ன கன்றாவி இது? உள்ளாடை போடாமல்... சட்டையின் மொத்த பட்டனையும் அவிழ்த்து போட்டு போஸ் கொடுத்த கிரண்!
கடந்த சில தினங்களாகவே பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னையில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்ததில், பல பகுதிகளில் மழை நீர் தேங்கியதோடு போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அதேபோல் சாலைகளில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இப்படிதான் நடிகர் கமலஹாசன் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை, மற்றும் காவேரி மருத்துவமனை சந்திப்பில், திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரம், பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்: ஆதரவற்றோர்களுடன் ஆட்டம்... பாட்டம்... என பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை பூமிகா! வைரலாகும் வீடியோ!
மரம் விழுந்த இடத்தில் நடிகர் நிதின் சத்யா இருந்ததாகவும், அவர் நூல் இழையில் அந்த விபத்திலிருந்து தப்பியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். எனவே மழை பெய்யும் காலங்களில் சென்னை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதை அடுத்து இவருக்கு பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.