
பிரபல நடிகர் நிக்கில் சித்தார்த்தா அவருடைய காதலி, பல்லவியை கோவாவில் உள்ள நடுக்கடலுக்கு அழைத்து சென்று, தன்னுடைய காதலை பட பாணியில் வெளிப்படுத்தி சம்மதம் வாங்கியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நிக்கில் சித்தார்த்தா தற்போது தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மருத்துவர் பல்லவி என்பவரை காதலித்து வந்த நிலையில், அவரிடம் காதலை சொல்ல மிகவும் ரொமான்டிக்கான இடமான கோவாவை தேர்வு செய்து, தன்னுடைய காதலியை நடு கடலில் உள்ள சிறிய தீவுக்கு அழைத்து சென்று, மண்டியிட்டு... கையில் முத்தம் கொடுத்து தன்னுடைய காதலை, பட பாணியில் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய காதலை பெற்றோர் ஏற்று கொண்டதை தொடர்ந்து பல்லவி மற்றும் நிக்கில் சித்தார்த்தா இருவருக்கும் ஏப்ரல் மாதம், 16 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த அழகிய காதல் ஜோடிகளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.