நடிகர் நட்ராஜுக்கு ஜோசியம் தெரியுமா? IPL ரன்னை முன்பே கணித்த அதிசயம்!

By manimegalai a  |  First Published May 13, 2019, 11:17 AM IST

மும்பை அணியினர், போட்டியை துவங்கிய சில நிமிடங்களிலேயே பிரபல நடிகர் நட்ராஜ், துல்லியமாக அவர்கள் எடுக்க விருக்கும் ரன்னை கூறி அசத்தியுள்ளார். 
 


மும்பை அணியினர், போட்டியை துவங்கிய சில நிமிடங்களிலேயே பிரபல நடிகர் நட்ராஜ், துல்லியமாக அவர்கள் எடுக்க விருக்கும் ரன்னை கூறி அசத்தியுள்ளார். 

நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே பரபரப்பாக காணப்பட்டனர். காரணம் ஐதாராபாத்தில் சென்னை மற்றும் மும்பை அணிக்களுக்கு இடையே IPL விளையாட்டின் இறுதி போட்டி நடந்தது.

Latest Videos

முதலில் பேட்டிங்கை துவங்கிய மும்பை அணி, 149 ரன்கள் எடுத்து. 150 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணியினருக்கு நிர்ணயித்தது. தோனியின் சென்னை அணியினர் 150 ரன்களை எடுக்க இறுதிவரை போராடியும் 148 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், மும்பை அணி, எத்தனை ரன் எடுக்கும் என்பதை, போட்டி துவங்கிய சில நிமிடங்களில் துல்லியமாக கூறி அதனை ட்விட் செய்தார் பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நடராஜ். ஆரம்பத்தில் இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை என்றாலும், அவர் ட்விட் போட்ட 149 ரன் மட்டுமே மும்பய் அணியினர் எடுத்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரசிகர்கள் சிலர் உங்களுக்கு ஜோசியம் தெரியுமா என்று கூட அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

149 ?....

— N.Nataraja Subramani (@natty_nataraj)

click me!