
தனது மூன்றாவது திருமண நாளை முன்னிட்டு ஆசை மனைவிக்கு பரிசளிக்க ஃபிளிப்கார்ட்டில் ஐ போன் ஆர்டர் பண்ண அது ஐயோ பரிதாபமான ஒரு போனாக வந்து சேர்ந்த கதையை ட்விட்டரில் புலம்பித்தள்ளியிருக்கிறார் நடிகர் நகுல்.
‘பாய்ஸ்’ நடிகரும் நடிகை தேவயானியின் தம்பியுமான நகுல் ‘காதலில் விழுந்தேன்’க்குப் பிறகு தொடர்ந்து தேடித்தேடி தோல்விப் படங்களில் நடித்து வருகிறார். அவரால் ஓவர் பில்ட் அப் பண்ணப்பட்டு கடந்த இரு வாரங்களுக்கு முன் ரிலீஸான ‘செய்’ படம் கூட வந்த சுவடு தெரியாமல் சென்றுவிட்டது.
ஏற்கனவே நொந்துபோன நிலையில் இருந்த அவர் தனது மூன்றாவது திருமண நாளுக்கு மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு ஃபிளிப்கார்ட்டில் ஒரு ஐ போனுக்கு ஆர்டர் செய்திருக்கிறார். நேற்று டெலிவரியான அந்த போனைப் பிரித்து பார்த்தவருக்கு ‘செய்’ படத்தை இரண்டாவது முறை பார்த்ததுபோல் ஒரு செம ஷாக். போன் அவ்வளவு பாடாவதியாக இருந்தது.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெறிகொண்டு பதிவிட்ட நகுல், ‘நான் எவ்வளவு பெரிய ஸ்டார். எனக்கே ஒழுங்காக பதில் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள். சும்மா விடமாட்டேன் அவர்களை’ என்று விடாமல் தகராறு செய்துகொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.