மகளின் பிறந்தநாளை பர்த்டே பார்ட்டி வைத்து தடபுடலாக கொண்டாடிய ‘நாக்கு முக்க' நகுல் - வைரலாகும் வீடியோ

Published : Aug 21, 2023, 01:56 PM IST
மகளின் பிறந்தநாளை பர்த்டே பார்ட்டி வைத்து தடபுடலாக கொண்டாடிய ‘நாக்கு முக்க' நகுல் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

நடிகர் நகுல் - ஸ்ருதி ஜோடி தங்களது மகளின் பிறந்தநாளை முதன்முறையாக பர்த்டே பார்ட்டி வைத்து கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவையானியின் உடன் பிறந்த சகோதரரான இவர், பாய்ஸ் படத்தில் நடித்தபோது குண்டாக இருந்தார். பின்னர் கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த நகுல், கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அதில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணம்.

குறிப்பாக அப்படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்த நாக்கு முக்க பாடல் உலகளவில் வைரல் ஆனது. அப்பாடல் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றளவும் அப்பாடலை கேட்டவுடன் நடனமாட தூண்டும் அந்த அளவுக்கு டான்சிங் வைப் உடன் கூடிய அப்பாடலுக்கு தன்னுடைய அசத்தலான நடனத்தால் உயிர் கொடுத்திருந்தார் நகுல். அதோடு அப்பாடலை வைத்தே அப்படத்தை புரமோட் செய்து வெற்றி கண்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதையும் படியுங்கள்... காதல் வாழ்க்கைக்கு குட் பை சொல்லியாச்சு.. காதலரை கரம்பிடித்தார் நடிகை சங்கீதா - பிரபலங்கள் வாழ்த்து!

இதையடுத்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்த நகுல், சினிமாவில் பாடகராகவும் ஜொலித்துள்ளார். அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, காதலில் விழுந்தேன் என பல்வேறு படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை பாடி தன் திறமையை நிரூபித்திருக்கிறார் நகுல். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு அகீரா என்கிற பெண் குழந்தையும், 2022-ம் ஆண்டு அமோர் என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், நடிகர் நகுல் தனது மகள் அகீராவின் 3-வது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார். இதில் அவரது நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர். நகுல் மகளின் பர்த்டே பார்ட்டி வீடியோவை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ஜெயிலர் ரஜினியின் மகன் வஸந்த் ரவி... கமகமவென ஊருக்கே சாப்பாடு போடும் மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!