பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா, தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் என்பவரை தற்பொழுது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரிய அளவிலான வரவேற்பை மக்கள் கொடுத்து வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது நடித்து புகழ்பெற்றுள்ள சின்னத்திரை நடிகை தான் சங்கீதா.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண அறிவிப்பை தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யாரை திருமணம் செய்யப்போகிறார் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஒரே ஆண்டில் முடிந்த திருமண வாழ்க்கை... 50 வயசுல அடுத்த கல்யாணமா? ஓப்பனாக சொன்ன நடிகை சுகன்யா
இதனையடுத்து திடீரென பிரபல youtuber TTF வாசனுக்கும், நடிகை சங்கீதாவுக்கும் தான் திருமணம் நடக்கவிருக்கிறது என்று பல செய்திகள் பரவலாக வெளிவந்த நிலையில், அதை மறுத்து வாசன் எனக்கு தம்பி போன்றவர் என்று கூறி அதனை மறுத்தார், தொடர்ச்சியாக தனது சீரியல் பணிகளையும் மேற்கொண்டு வந்தார் சங்கீதா.
இந்நிலையில் தற்பொழுது தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த விக்னேஷ் என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் தற்பொழுது திருமணம் செசெய்துகொண்டுள்ளார். நேற்று இவர்கள் இருவருடைய திருமணம் எளிமையான முரையில் நடைபெற்றது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஜெயிலர் ரஜினியின் மகன் வஸந்த் ரவி... கமகமவென ஊருக்கே சாப்பாடு போடும் மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசா?