’சந்திராயன் 2’நிகழ்வு நிச்சயம் ஒரு சரித்திர சாதனைதான்’...நடிகர் மாதவன் ஆறுதல் ட்வீட்...

By Muthurama LingamFirst Published Sep 7, 2019, 3:51 PM IST
Highlights

’நடந்தது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...சந்திராயன் 2 விவகாரத்தில் நிச்சயமாக நாம் சரித்திர சாதனை ஒன்றைத்தான் படைத்திருக்கிறோம்’என்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருவதால் சந்திராயன் 2வின் ஒவ்வொரு அசைவையும் குறித்து தொடர்ந்து ட்விட் போட்டு வந்தார் மாதவன்.
 

’நடந்தது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...சந்திராயன் 2 விவகாரத்தில் நிச்சயமாக நாம் சரித்திர சாதனை ஒன்றைத்தான் படைத்திருக்கிறோம்’என்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருவதால் சந்திராயன் 2வின் ஒவ்வொரு அசைவையும் குறித்து தொடர்ந்து ட்விட் போட்டு வந்தார் மாதவன்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைப் பலரும் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், இறுதிக்கட்டத்தில் அது முடியாமல் போனதால் பலரும் சோகத்தில் மூழ்கினர்.இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இஸ்ரோவிலிருந்து பிரதமர் மோடி கிளம்பும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் மனமுடைந்து அழுதார். அவரைப் பிரதமர் மோடி தேற்றினார்.

இந்த நிகழ்வில் 'ராக்கெட்ரி' படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் கலந்துகொண்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விஞ்ஞானி நம்பி நாராயணின் கதை குறித்த ஆராய்ச்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவரும் மாதவன் கடந்த சில தினங்களாகவே சந்திராயன் 2 குறித்து நூற்றுக்கணக்கில் ட்விட்கள் போட்டு தனது பரவசத்தை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இறுதிக்கட்டத்தில் நிலவில் தரையிறங்க முடியாமல் போனது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், " நடந்தது எதுவாக இருந்தாலும் சரி.. இது சரித்திர நிகழ்வே. எனக்கென்னவோ விக்ரம் லேண்டரை நிலைநிறுத்தும் ஃபைன் பிரேக்கிங் த்ரஸ்டர்கள் தென் துருவ குளிர்ச்சியால் உறைந்து மூடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.நிலவின் தென் துருவ ஆராய்ச்சியில் 90%-ஐ ஆர்பிட்டரே மேற்கொள்ளும். கடவுளின் ஆசியில் அது பத்திரமாகவே இருக்கிறது. அதனால் இந்த மிஷன் இன்னமும் வெற்றிகரமாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் மாதவன். ‘ராக்கெட்ரி’படம் முடிஞ்சவுடனே சினிமாவுல கண்டினியூ பண்ணுவீங்களா அல்லது சயிண்டிஸ்களோடு சேர்ந்துருவீங்களா மாதவன்?

What ever it is .. it’s still History in the making. 🙏🙏🙏🙏😘

— Ranganathan Madhavan (@ActorMadhavan)

click me!