
நடிகர் அஜீத், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோர் பைக் மீது தீராத ஆர்வம் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கிளாசிக் பைக்குகள் முதல் சந்தைக்கு வரும் புதிய மாடல் பைக்குகள் வரை பல பைக்குகளை அஜீத்தும் தோனியும் கேரேஜ்ஜில் சேகரித்து வைத்துள்ளனர்.
அஜீத், தோனி வரிசையில் நடிகர் மாதவனும் பைக்கின் மீது தீராத ஆர்வம் கொண்ட பைக் பிரியராம். மாதவனின் கேரேஜிலும் ஏகப்பட்ட மாடல் பைக்குகள் இருக்கின்றன. இருந்தாலும், பைக் மீது தீராத ஆர்வத்தால் தீபாவளிக்காக தனக்குத்தானே ஒரு பைக்கைப் பரிசளித்துக் கொண்டுள்ளார் மாதவன்.
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பைக்கின் பெயர் ‘இந்தியன் ரோடு மாஸ்டர்’. தண்டர் பிளாக் என்ற ஒரே ஒரு வகையில் மட்டும் இது வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலை 40 லட்சம் ரூபாய்.
”தண்டர் ஸ்ட்ரோக் 111” என்ற எஞ்ஜினைக் கொண்ட இந்த பைக்கில், 6 கியர்கள் உள்ளன. 20.8 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது. 407 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் பெட்ரோல் முழுவதுமாக நிரப்பினால், 421 கிலோவாக எடை கூடிவிடும்.
ஏற்கனவே பிஎம்டபிள்யூ, டுகாட்டி, யமாஹா போன்ற பல்வேறு பைக்குகளை வைத்திருக்கும் மாதவனின் கேரேஜில் தண்டர்பிளாக்கும் சேர்ந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.