
கடந்த தீபாவளி தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்த வசனங்கள் இருந்தது. இந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, பொன்னார், ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிலும் தேசிய செயலாளர் எச்.ராஜா, விஜய்யை ஜோசப் விஜய் என்று கிண்டலாக கூறினார், இதன் உச்சகட்டமாக விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் ஒட்டுமொத்தமாக எல்லோருடைய கோபத்திற்கும் ஆளானார்.
மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
அதோடு விட்டாரா? அதான் இல்லை... விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு என அடுக்கடுக்கான ஆதாரத்தை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மற்றொரு முகத்தை காட்டியதாகவே விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரில்தான் இருந்தது. தம்மை ஜோசப் விஜய் ஜோசப் விஜய் என்று கேலி செய்த எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே "ஜோசப் விஜய்" சேவ் ஜீசஸ் என்று இருந்த லட்டர்பேடிலேயே அவர் நன்றி அறிக்கையை விட்டார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'ஜோசப் விஜய் என்ற தன்னுடைய பெயர் ஒரு அவமானம் அல்ல. அது ஒரு அடையாளம் என்று பெருமையாக ஜோசப் விஜய் என பொறிக்கப்பட்டுள்ள லெட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார் விஜய். அவருக்கு எனது பாராட்டுகள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.