மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்..! "என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள்"...!

First Published Apr 19, 2018, 5:52 PM IST
Highlights
actor karunakaran commented for modi tweet


லண்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்திய வம்சாவளி  மக்களிடம் பேசினார்

அப்போது  நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கதுவா பாலியல் வன்கொடுமை  பற்றி பேசினார்

பாலியால் வன்கொடுமை என்றால் அது பாலியல் வன்கொடுமை தான்..  இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே வேளையில்,  குழந்தைகளிடம் பாலியல் வன்புணர்வு என்பது அரசியலாக்க கூடாது.

The 125 crore people of India are my family: PM

— PMO India (@PMOIndia)

அப்படி அரசியலாக்கினால்,கடந்த கால ஆட்சியில் நடந்த  பிரச்சனைகளை ஒப்பிட்டு பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பும் படி  பேசினார்.

அதாவது, பாலியல் வன்கொடுமைகளை யாராலும் ஏற்றுக் கொள்ள  முடியாது... அதனை அரசியலாக்கவும் கூடாது என பிரதமர் தெரிவித்து  உள்ளார்

சமீப காலமாக நடக்கும் பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை  அவமானப்பட வைக்கும் செயலாக உள்ளது.

இது போன்ற குற்றங்களை செய்யும் ஆணும் ஒருவரின் மகன் தான்.....பெண்களை ஏன் வீட்டிற்கு வர தாமதமானது ஏன்..? என  கேள்விக்கு கேட்கும் பெற்றோர்கள் ஆண்களை இது போன்று கேள்வி கேட்பது இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில்125 கோடி மக்களும் எனது குடும்பமே  என்றார்....

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் பிரதமர்.அதற்கு கமெண்ட்ஸ் கொடுக்கும் விதமாக நடிகர் கருணாகரன்,"தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் விட்டு விடுங்கள்" என தெரிவித்து  உள்ளார். கடைசியில் மன்னிக்கவும்....சாரி என்றும் தெரிவித்து உள்ளார்

 

 

click me!