சூர்யா இப்படி! அதனால் எனக்கு பெண் பார்த்து அலுத்துப்போய் பெற்றோர் சொன்ன வார்த்தை! நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

Published : Feb 06, 2019, 03:18 PM IST
சூர்யா இப்படி! அதனால் எனக்கு பெண் பார்த்து அலுத்துப்போய் பெற்றோர் சொன்ன வார்த்தை! நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

சுருக்கம்

ரகுல் பிரீத் சிங் ஜோடியாக கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' படத்தின் அறிமுக விழா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.  

ரகுல் பிரீத் சிங் ஜோடியாக கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' படத்தின் அறிமுக விழா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் கார்த்தி ,ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் ரவிசங்கர், கவிஞர் தாமரை, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார், படத்தை வெளியிட்ட முரளி , உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் லட்சுமணன் நானும் குழந்தைப்பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். அவருடைய தாத்தா 'மதுரை வீரன்' படத்தை தயாரித்தவர். இயக்குனர் ரவி ஷங்கர் திறமையானவர்.  ரகுல்ப்ரீத் சிங் சிறந்த நடிகை . அவர் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். படப்பிடிப்பின்போது அவர் ஒரு தயாரிப்பு நிர்வாகி போல் நடந்து கொண்டார். கதாநாயகி போல் தெரியவில்லை என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், இது ஒரு காதல் படம், ஆனால் காதலை பற்றி பேசும் படம் அல்ல. கதைப்படி அப்பா வளர்ப்பில் வளர்ந்தவன் நான். ரகுல் அம்மா வளர்ந்த பெண்.  பெண்களுக்கு, ஆண்கள் துணை தேவை இல்லை என்று நம்புகிறவர்.  படத்தில் வில்லன் இல்லை. அதிரவைக்கும் காட்சிகள் இல்லை. என்றாலும் சுவாரசியமான கதை இருக்கும். இந்த படத்தில் நடித்தது ஒரு சவாலாக இருந்தது.

இதை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் சூர்யாவை பற்றி பேசிய கார்த்தி,  அண்ணன் சூர்யா தான் என்னை விட அழகானவர். எனக்கு முகம் பெரியது.  அதனால் எனக்கு மணப்பெண் சுலபமாக கிடைக்கவில்லை. ஆறு வருடங்களாக எனக்கு பெண் தேடினார்கள் பெற்றோர்.  கடைசியில் "நீயே ஒரு பெண்ணை தேடிக் கொள் என அம்மாவும் அப்பாவும் தமாசாக சொன்னார்கள். இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே என்று தான் கூறினேன் என கலகலப்பாக தன்னுடைய உரையை முடித்தார் கார்த்தி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்