இந்நிலை மாறும்... தொழிலாளர்களை வாழ்த்தி கமல் போட்ட மே தின ட்விட்!

Published : May 01, 2020, 01:07 PM IST
இந்நிலை மாறும்... தொழிலாளர்களை வாழ்த்தி கமல் போட்ட மே தின ட்விட்!

சுருக்கம்

வருடம் 365 நாளும் உழைக்கும்  உழைப்பாளர்களை, பெருமை படுத்தும் விதமாக, எவ்வித பாகுபாடும் இன்றி, இந்தியாவில் உள்ள அணைத்து உழைப்பாளர்களாலும், மே - 1 ஆம் தேதி அன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

உழைப்பாளர் தினம்:

வருடம் 365 நாளும் உழைக்கும்  உழைப்பாளர்களை, பெருமை படுத்தும் விதமாக, எவ்வித பாகுபாடும் இன்றி, இந்தியாவில் உள்ள அணைத்து உழைப்பாளர்களாலும், மே - 1 ஆம் தேதி அன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, சமூக வலைத்தளங்களில் குடியரசு தலைவர், பிரதமர், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களும் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் ட்விட்

அந்த வகையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, நடிகர் கமலஹாசன் மே தின வாழ்த்துக்கள் கூறி ட்விட் செய்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்... " நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் புரியாத வண்ணம், வார்த்தைகளில் புதிர் போட்டு பேசும் நடிகர் கமலஹாசன், இந்த முறை அனைவருக்கும் புரியும்படி போட்டுள்ள இந்த ட்விட்டருக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். 

கருத்து:

கடந்த மார்ச் மாதம் முதலே... கொரோனா வைரஸின் தாக்கத்தால், போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையின்றி துயரப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலும், இந்நிலை மாறும் என தன்னுடைய வார்த்தையால் நடிகர் கமல் இந்த பதிவில் ஊக்க படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!