ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? ஆதங்க கேள்வி கேட்ட கமல்!

By manimegalai aFirst Published May 8, 2020, 2:13 PM IST
Highlights

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன்,  தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவில் இருந்து, மக்களை காக்கும் விதமாக, தன்னுடைய கட்சியின் சார்பில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன்,  தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவில் இருந்து, மக்களை காக்கும் விதமாக, தன்னுடைய கட்சியின் சார்பில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பசி பட்டினியால் வாடும் ஏழை மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள், அசுர வேகம் எடுத்து வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, நேற்றைய தினம் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன், டாஸ்க் மார்க் கடைகள் திறக்கப்பட்டது, இதற்கு பல்வேறு கண்டங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மதுக்கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி, மக்கள் பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கமலஹாசன் தற்போது போட்டுள்ள ட்விட் ஒன்றில், மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என ஆதங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கேள்விக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
 

 

மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!