இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி! நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்த கமல்!

By manimegalai aFirst Published May 8, 2020, 8:49 PM IST
Highlights

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால்  மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால்  மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் கண்டனங்கள் எழுந்தன. நாற்பது நாட்களாக மது இல்லாமல் இருந்த குடிமகன்கள் டாஸ்மாக் வாசலில் காத்திருந்து சரக்கு பாட்டில்களை வாங்கிச்சென்றனர். இது தான் நேற்றைய தினத்தின் ஹாட் நியூஸ். 

 

குடிமகன்களுக்கு இந்த விஷயம் ஸ்வீட் நியூஸ் என்றாலும்  டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், குடிபோதையால் நேற்று முழுவதும் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 

மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களுக்கு கூட அனுமதி அளிக்கப்படாத போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது ஏன் என மனுதாரர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அந்த வகையில், நடிகர் கமலஹாசன் தொடர்ந்து தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மது கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து, தற்போது ட்விட் ஒன்றை போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  " நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்"  என கமல் கூறியுள்ளார்.

அவரின் பதிவு இதோ...
 

 

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி

— Kamal Haasan (@ikamalhaasan)

 

click me!