நடிகர் ஜெகனால் ஏற்பட்ட விபத்து... பரிதாபமாக இறந்த இளைஞர்..!

Asianet News Tamil  
Published : Jan 20, 2018, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நடிகர் ஜெகனால் ஏற்பட்ட விபத்து... பரிதாபமாக இறந்த இளைஞர்..!

சுருக்கம்

actor jegam car accident and one person death

நடிகர் ஜெகன் சின்னத்திரையில் 'கடவுள்பாதி மிருகம்பாதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரை ஒரு சிறந்த காமெடி நடிகராக அடையாளம் காட்டியது சூர்யாவுடன் இவர் நடித்த 'அயன்' திரைப்படம் தான்.

திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், ஏற்றி விட்ட ஏணியை மறவாத இவர் சின்னத்திரை நிகழ்சிகளையும் தொகுத்து  வழங்கி வருகிறார். சில சமயங்களில் இவர் நிகழ்சிகளில் பேசும் வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளதாக இருக்கும். இதனால் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ஜெகன் வந்தவாசியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஹுசைன் என்கிற இளைஞர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இவரை மேல்சிகிச்சைக்காக பொதுமக்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

இந்த விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்து போலீசார் நடிகர் ஜெகனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு ஆப்பு வைத்த அந்த இரண்டு காட்சிகள்..! தானே வழிய சென்று மாட்டிக்கொண்ட விஜய்..!
புஷ்பா 2 வசூலை பின்னுக்கு தள்ளிய படம்! இந்தியாவிலே அதிக வசூலை அள்ளிய முதல் திரைப்படம் இதுதான் தெரியுமா?