
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான "தனுசு ராசி நேயர்களே" படத்திலும் காதல், ரொமான்ஸ், லிப் லாக் ஆகிய காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இப்படி அடுத்தடுத்து அட்ராசிட்டி செய்யும் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் "தாராள பிரபு". விந்து அணுவை தானம் செய்யும் நபராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.
'தடம்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த தன்யா ஹோப், இதில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விக்கி டோனர்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் "தாராள பிரபு". அந்த படத்தில் அன்னு கபூர் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் விவேக் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக தாராள பிரபு படத்திற்கு 8 பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் ஜோடி இசையமைத்து வருகின்றனர். இதனால் தாராள பிரபு படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தாராள பிரபு படத்தின் டீசர் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஸ்பெர்ம் பேங்க் வைத்து நடத்தும் நபராக விவேக் நடித்துள்ளார். அவரிடம் குழந்தை கேட்டு வரும் தம்பதிகளில் ஒருவர் தனுஷ் மாதிரி நடிக்கனும் என கேட்பது, தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விவேக் சாமி கும்பிடும் காட்சியுடன் தொடங்கும் டீசர், ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ஆட்டத்துடன் நிறைவடைகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த டீசர், இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.