
பிரபல இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து வந்தவர் தான் பார்த்திபன். கடந்த 1989ம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். தமிழக அரசு வழங்கும் இரு மாநில விருதுகளும், ஒரு தேசிய விருதும் இந்த திரைப்படத்திற்கு கிடைத்தது.
தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்ற வெகு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். அதேபோல 1989ம் ஆண்டு பார்த்திபனின் "புதிய பாதை" திரைப்படம் வெளியான அதே ஏப்ரல் 14ம் தேதி, உலகநாயகன் கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படம் வெளியானது. இந்நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின் இரு ஜாம்பவான்களின் திரைப்படங்களும் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நேருக்கு நேர் மோதி உள்ளது என்றால் அது மிகையல்ல.
இயக்குனர் பார்த்திபன் ஒரு அறிமுக நடிகரோ அல்லது புதுமுக இயக்குனரோ அல்ல, ஏற்கனவே தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளை கடந்து பயணித்து வரும் மிகச் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராவார். இருப்பினும் அவர் ஒவ்வொரு திரைப்படங்களை வெளியிடும் பொழுதும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றது என்றால் அது மிகையல்ல.
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியான இயக்குனர் பார்த்திபனின் "டீன்ஸ்" திரைப்படம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக இந்த திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இந்த சூழலில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இப்பொழுது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில்.. "Friends.. சத்தியமா சொல்றேன், TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே".
"இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thoughtல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு நன்றி, நனைந்த இமைகளோடு இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்று எழுதியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.