
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ பதிவை திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அந்த வீடியோ பிரதியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திலீப் கேரளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தற்போது திலீப் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் ' மலையாள நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என் மீது குற்றம் சாட்டி உள்ளனர். போலீசாரிடம் சிக்கி உள்ளதாக கூறப்படும் செல்போன் மெம்மரி கார்டில் துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள் உள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படங்களை பார்க்க எனக்கு உரிமை உள்ளது. என்னை வழக்கில் சிக்க வைக்க இது போன்ற படங்கள் உருவாக்கி இருப்பதாக கருதுகிறேன். எனவே அந்த புகைப்படங்களை எனக்கு காட்டும் படி உத்தரவிட வேண்டும் " என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.