
சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் மிக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில், நேற்று இரவு 9 :30மணிக்கு திடீர் என ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்து நடந்த போது, படப்பிடிப்பில் இருந்த நடிகர் கமல், காஜல் அகர்வால், மற்றும் இன்னும் சிலர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
கிரேன் விழுந்து காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்... 'இந்தியன் 2 ' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், மன வருத்தத்தோடு ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... " இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது , இனி நடக்கக் கூடாதது .உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் , மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது , இனி நடக்கக் கூடாதது .உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் , மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.