
தமிழ்த்திரைப்பட ரிலீஸ்களில் இப்போதெல்லாம் யாரோடு யார் மோதுகிறார்கள் என்கிற சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தனுஷ் படங்களின் மேனேஜரே அவரது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’படத்துடன் தனது சொந்தத் தயாரிப்பான ‘கடைசி குண்டு’படத்துடன் மோதவிட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் போராட்டத்துக்குப் பின் அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்து கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதேதேதியில் தான்,இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படமும் வெளியாகவிருக்கிறது.
இந்த இரண்டு படங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒரேதேதியில் இரண்டு படங்கள் வெளியாவதில் என்ன பஞ்சாயத்து என்கிறீர்களா?இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தைத் தயாரித்திருப்பது பா.இரஞ்சித் என்றாலும் அதைத் தமிழகம் முழுதும் வெளியிடவிருப்பவர் வினோத். இவர், தனுஷின் வுண்டபார் நிறுவனத்தின் நீண்டகால நிர்வாகி, இன்றுவரை தனுஷ் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்துவருகிறவர்.
இந்த நவம்பர் மற்றும் வரும் டிசம்பர் மாத படங்களின் ரிலீஸ் பட்டியல் மிகவும் நெருக்கடியாக உள்ளதால் வேறு வழியின்றி அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக தனுஷிடம் எடுத்துக்கூறி அனுமதி பெற்ற பிறகே வினோத் அப்படத்தை வெளியிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.