
சமீபத்தில் தான் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து மற்றொரு விருதுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார் தனுஷ்.
ஒவ்வொரு ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் நிறைவடைகிறது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில், பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, ஏராளமான கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கடந்த வாரம் நடிகை சமந்தா இந்த சர்வதேச படவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் மூலம் கோவா சர்வதேச பட விழாவில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகை என்கிற சிறப்பையும் இவர் பெற்றார்.
மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் ஒவ்வொரு வருடம், பல மொழி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விழாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்ற 'அசுரன்' படம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த (ஆண்) நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
IFFI52 உடன் நடத்தப்பட்ட BRICS திரைப்பட விழாவில், கலந்து கொண்டு... தேசிய விருதை அடுத்து இந்த விருதையும் 'அசுரன்' படம் பெற்றுள்ளதை அறிந்த தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள். மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.