
நடிகை அமலா பாலுக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் தலைவா படத்தின் போது பற்றிய காதல், திருமணத்தில் முடிந்தது. ஆனால் கல்யாணம் ஆன வேகத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனிடையே அமலா பால், ஏ.எல்.விஜய் விவாகரத்து பெற நடிகர் தனுஷ் தான் காரணம் என்று பிரபல தயாரிப்பாளரும், விஜய்யின் அப்பாவுமான ஏ.எல். அழகப்பன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் திரைத்துறையில் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில் நடிகை அமலா பால் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.
இயக்குநர் விஜய்யிடம் இருந்து நான் தான் விவாகரத்து பெற முடிவு செய்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ள அமலா பால், அதற்கு யாரும் காரணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர். நான் விஜய்யை பிரிய முடிவு செய்த போது அவர் வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
அப்படிப்பட்டவர் எப்படி நாங்கள் பிரிய வேண்டும் என்று நினைப்பார். எனக்கும் விஜய்க்கும் இடையே சமரசம் செய்து வைக்கவும் முயன்றவர். அப்படியிருக்க நாங்கள் பிரிய அவர் எப்படி காரணமாக இருப்பார் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அமலா பால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.