
நடிகர் தனுஷ் நடிகராக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. படம் பீரியட் படமாக சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ்.
கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய தயாரிப்பை துவங்கியுள்ள தனுஷ், டிடி3 படத்தை பக்கா காதல் படமாக இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
தனுஷும் கேமியோ ரோலில் இணைந்துள்ள இந்தப் படத்தில் மற்றும் புதிய வரவுகளாக பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க தற்போது கமிட்டாகியுள்ளனர். இந்த நிலையில் அந்த படத்தின் பெயர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.