நடிகர் பாக்யராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா...? தற்கொலைக்கு துணிந்த மகள்...! காரணம் இதுதான்..!

 
Published : Feb 03, 2018, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நடிகர் பாக்யராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா...? தற்கொலைக்கு துணிந்த மகள்...! காரணம் இதுதான்..!

சுருக்கம்

actor bakkiyaraj daugther three times sucide attempt

கோலிவுட் திரையுலகில் '16 வயதினிலே படத்தில், துணை இயக்குனராக அறிமுகம்மான நடிகர் பாக்யராஜ், பின் நடிகர், இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர். 

இவருடைய படைப்புகளுக்கு தமிழ் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இப்படி பலராலும் அறியப்பட்ட இவரது வாழ்க்கையில் தாங்க முடியாத ஒரு பிரச்சனை உள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாக்யராஜ் குடும்பம்:

நடிகர் பாக்யராஜ் குடும்பத்தை கலைக்குடும்பம் என கூறலாம். இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துப் பிரபலம்மானவர். 'டார்லிங் டார்லிங்' படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளார். சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்மாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். மகள் சரண்யா 'பாரிஜாதம்' படத்தில் நடிகர் பிரித்திவிராஜ்ஜிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சரண்யா படங்களில் நடிக்க விரும்பவில்லை.

சரண்யாவின் காதல்:

பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகர் பாக்யராஜ். இவருடைய பிள்ளைகள் காதலித்தால் என்ன சொல்ல போகிறார் கண்டிப்பாக பச்சைக்கொடி தான். இந்த தைரியத்தில் ஏற்கனவே அவர் வீட்டில் அரங்கேறியது சந்தனு கீர்த்தி திருமணம். அதே போல் இவருடைய மகள் சரண்யாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கு சரண்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும், காதலர் தன்னுடைய காதலில் நிலையாக இல்லாமல் போனதால் இவருடைய காதல் தோல்வியடைந்தது.

தற்கொலை முயற்சி:

பிரபலத்தின் மகள் ஆடம்பரமான வாழ்க்கை என பலவற்றை சரண்யா பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனுக்கு உள்ள உணர்சிகளும், மனசும் தானே அவருக்கும் இருக்கு. காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்தாராம்.

பெற்றோரின் நிலை;

பேர், புகழ் பல இருந்தும் 35 வயதை தொட்ட மகளுக்கு இன்னும் திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என்கிற கவலையை மனதில் புதைத்துக்கொண்டு. சாதாரணமாக இருப்பது போல் வெளியிலும் காட்டிக்கொள்கின்றனர் இந்த நட்சத்திர தம்பதிகள்.

மேலும் பல முறை இவர்கள் சரண்யாவை திருமணம் செய்துக்கொள்ளும் படி வற்புறுத்தியதால் சரண்யா படிப்பைக் காரணம் கூறி, அமேரிக்கா சென்று விட்டார். தற்போது அமெரிக்காவில் அவர் மனதிற்கு பிடித்த ஒரு படிப்பை தேர்வு செய்து நடித்து படித்து வருகிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!