என்னதான் பிரச்சனை நடிகர் சங்கத்தில்..??

 
Published : Nov 27, 2016, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
என்னதான் பிரச்சனை நடிகர் சங்கத்தில்..??

சுருக்கம்

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் பிசுபிசுத்து போனது. நடிகர் சங்க நிர்வாகிகளே பலரும் புறக்கணித்தனர். பாதுகாப்பு காரணங்களால் இளம் நடிகர் , நடிகைகளும் வராததால் கூட்டம் குறைவான ஆட்களை வைத்து நடத்தப்பட்டது.

 

நடிகர் சங்கத்தை கைப்பற்றிய பாண்டவர் அணி அதன் பின்னர் நடத்திய நிகழ்வுகளுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றாலும் வேலை எதுவும் நடக்கவில்லை என்பதே நடைமுறை என பலரும் குற்றம் சாட்டினர். 

நடிகர் சங்கத்தை கட்டுவோம் என டிஜிட்டல் பிளான் எல்லாம் போட்டவர்கள் பின்னர் அதற்காக நடத்திய கிரிக்கெட் மேட்சும் அதன் பின்னர் வந்த வெள்ள பாதிப்பை கண்டுகொள்ளாமல் விட்ட அலட்சிய போக்கும் பொதுமக்கள் மத்தியில் இமேஜை இறக்கியது.

 

கிரிக்கெட் மேட்ச் நடத்தியதில் ஊழல் நடந்ததாக வராகி என்பவர் பல புகார் அளித்தார். நடிகர் சங்கத்தினர் கணக்கு இருக்கிறது என்று கூறிய போதிலும் எந்த கணக்கையும் காண்பிக்கவில்லை. தற்போது புகார் காவல் நிலையத்தில் உள்ளது. 

 

பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டுவதிலும் , அவர்களை பழிவாங்குவதிலுமே விஷால் குரூப் நேரத்தை செலவிடுவதாக நிர்வாகிகள் மத்தியிலேயே அதிருப்தி எழுந்தது. 

 

விஷால் தாந்தோன்றித்தனமாக நடக்கிறார், அவருக்கு கார்த்தி துணை போகிறார் இவர்கள் வைத்தது தான் சட்டம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் , நாசர் , பொன் வண்ணன் மற்றும் ரித்தீஷ் போன்றோர்கள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதில் ரித்தீஷ் பகீரங்கமாக விலகியே செயல்படுகிறார். நடிகர் சங்கம் பொதுவான அமைப்பு அதில் திமுக , அதிமுக பாகுபாடு காட்டவேண்டாம் என நாசர் தரப்பு கூற விஷால் தரப்பு அதை காதிலேயே போட்டுகொள்ளவில்லை. 

திமுக தலைவர் கருணாநிதியும் , அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கலையுலகிலிருந்து அரசியலில் சாதித்தவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் ஆனால் இதில் ஒரு சாரர் பக்கம் சாய்வது சரியல்ல எனபது நாசர் தரப்பு வாதம் . 

 

இதை விஷால் கார்த்தி தரப்பு ஏற்றுகொள்ளவில்லையாம். விளைவு நாசர் பொம்மையாக வேடிக்கை பார்க்கிறார். விஷால் உதயநிதி ஸ்டாலின் , கார்த்தி மூவரும் இணைந்து நடிகர் சங்கத்தை ஆட்டுவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் பொதுவான ஒரு இளம் பட்டாலம் வரும் என ஆர்வமாக நடிகர் சங்க தேர்தலில் களம் இறங்கிய இளம் நடிகர் நடிகைகள் பட்டாளம் நமக்கெதற்கு அரசியல் என ஓடி ஒதுங்கி விட்டனர். நடிகர் சங்க நிர்வாகிகளுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து வெளியே வருகிறது. 

 

இது என்று பெரிதாக வெளியே வருமோ என தெரியாது என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மறுபுறம் விஷால் தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலை ஆரம்பித்து வைத்தது நடிகர் சங்கத்துக்கு பிரச்சனையை கொண்டு வரும் என அனைவரும் நினைக்கின்றனர். இதனால் நடிகர் சங்கத்தின் பிரச்சனையா எனபெரும்பாலானோர் அலறி அடித்து ஓடுகின்றனர். 

 

எம்ஜிஆரும் , சிவாஜியும் , விஜயகாந்தும் இன்னும் பல முன்னணியினர் தலைமை தாங்கி பெருமை சேர்த்த நடிகர் சங்கத்துக்கு இப்படி ஒரு நிலையா என மூத்த கலைஞர்கள் மனம் வெதும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!