கனசபை மரணத்திற்கு காரணம் இது தான்... தம்பி தற்கொலை குறித்து நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பகீர் தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 08, 2020, 06:18 PM IST
கனசபை மரணத்திற்கு காரணம் இது தான்... தம்பி தற்கொலை குறித்து நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பகீர் தகவல்...!

சுருக்கம்

இந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் ஆனந்தராஜ். இவரது தம்பி கனகசபை கடந்த 5ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி கோவிந்த சாலை திருமுடி நகரில் வசித்து வந்த கனகசபை (55) வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. அவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அதில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ள ஆனந்தராஜ், தனது தம்பியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போட்டுடைத்துள்ளார். கனகசபை ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தார். அது தொடர்பாக சிலர் அவரை தொடர்ந்து மிரட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து போலீசார், கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!